கோவை வடகோவை மேம்பாலம் அருகே அமைந்துள்ள மணி கோபுரத்தை கோயம்புத்தூர் சிட்டி ரவுண்ட் டேபிள் அமைப்பு கடந்த 1994ம் ஆண்டு கட்டியது. இந்த மணி கோபுரத்தை அப்போதைய மாநகராட்சி ஆணையர் சந்திரமெளலி திறந்து வைத்தார்.
இந்த சூழலில் கோவை சிட்டி ரவுண்ட் டேபிள் அமைப்பு இந்த மணி கோபுரத்தை தற்போது புதுப்பித்துள்ளது. முழுக்க முழுக்க ஜி.பி.எஸ் கட்டுப்பாட்டுடன் இயங்கும் இக்கடிகாரத்தின் நாலா புறமும் உள்ள கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த மணி கோபுரத்தை கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் சிட்டி ரவுண்ட் டேபிள் அமைப்பின் நிர்வாகிகள் ஜெயக்குமார், ராமதாஸ் ஜெயக்குமார், இளங்கோ மற்றும் அஷ்வின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.