தாயுடன் தவறான உறவு! வெட்டிக்கொன்ற மகன்!

தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த நபரை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் சென்னை கொளத்தூரில் நிகழ்ந்திருக்கிறது. சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கும் சிட்லபாக்கம் வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த அன்சர் பாஷா என்பவர் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்திருக்கிறார்.

 

அன்சர் பாஷாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. லட்சுமிக்கும் திருமணமாகி பெரிய அஜீத் என்ற மகன் உள்ளார். இந்தநிலையில் செங்குன்றத்தை அடுத்திருக்கும் ரெட்டேரி சிக்னல் அருகே நேற்று இரவு ஆட்டோவை நிறுத்தி விட்டு தாய் மெகபூபா மற்றும் லட்சுமியுடன் அன்சர் பாஷா பேசிக்கொண்டிருந்தார்.

 

அப்போது லட்சுமியின் மகன் பெரிய அஜீத் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் அன்சர் பாஷாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. இதில் அன்சர் பாஷா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ராஜமங்கலம் காவல்துறையினர் பாஷாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய பெரிய அஜீத், சின்ன அஜித் மற்றும் அஸ்வின் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.


Leave a Reply