மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற காவல் துறையின் மனு தள்ளுபடி !!!
மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற காவல் துறையின் மனுவை நீதிபதி சக்திவேல் தள்ளுபடி செய்தார்.
மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற காவல் துறையின் மனுவை நீதிபதி சக்திவேல் தள்ளுபடி செய்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ப.பா.மோகன்
குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞரை சந்திப்பது அடிப்படை உரிமை,மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க நீதிமன்றம் உத்திரவு வழங்கியும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும்,அனுமதி மறுக்கப்பட்டதை நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் அரசு தரப்பு மனுவை திரும்ப பெறுவதாக கூறியது.
இதையடுத்து நீதிமன்றம் காவல் துறையின் மனுவை தள்ளுபடி செய்தது.மேலும்,மாவோயிஸ்ட் தீபக்கை கோவை காவல் துறை திட்டமிட்டு பிடித்து தாக்கி இருக்கின்றது எனவும்,மாவோயிஸ்ட் தீபக்கின் உயிருக்கு ஆபத்து இருக்கின்றது என்பதையும் நீதிமன்றத்தில் பதிவு செய்து இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




