--- --:--:-- --

ஜொள்ளுவிட்ட ஓட்டுநர்! பறிபோன வேலை!

2

சுற்றுலா சென்ற போது கல்லூரி மாணவிகளை ஓடும் பேருந்தில் அதன் ஓட்டுநர் கியரை மாற்ற அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில் ஓட்டுனரின் வேலை பறிபோயிருக்கிறது.

 

கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்லும்போது அவர்கள் பயணிக்கும் பேருந்து ஆட்டம் பாட்டத்துடன் அமர்க்களமாக இருப்பது வழக்கம்தான். அதேபோலவே கேரள மாநிலம் கல்பேட்டா கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கோவாவிற்கு தனியார் பேருந்தில் சுற்றுலா சென்றனர்.

 

மாணவிகளின் நடனம், பாடலால் உற்சாகமடைந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டி இருக்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இடம்பெற்றிருந்த காந்த கண்ணழகி பாடல் பின்னணியில் ஒலிக்க பேருந்தில் இருந்த அனைவரும் உற்சாகத்தில் நிறைந்திருந்தனர்.

 

அப்போது ஓட்டுனரின் பின் இருக்கையில் இருந்த சில மாணவிகள் கியரை தாங்களே மாற்றுகிறோம் என கேட்டுள்ளனர். பாடலை கேட்டபடி இருக்கையில் நடனமாடிக் கொண்டிருந்த ஓட்டுனரோ உற்சாக மிகுதியில் மாணவிகளை கியரை மாற்ற அனுமதித்தார்.

 

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் ஓட்டுநரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆபத்தை உணராமல் அவர் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.இதற்கிடையே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பேருந்து ஓட்டுநர் வயநாட்டை சேர்ந்த ஷாஜி என்பது தெரியவந்தது.

 

இதையடுத்து பணியில் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறி அவரது ஓட்டுநர் உரிமம் ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் விதிகளை முறையாக பின்பற்றுவதுடன், பணியில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon