--- --:--:-- --

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்

1

அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தரவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

இந்த தீர்ப்பையடுத்து சன்னி வக்பு வாரியம் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று ஏற்கனவே கூறி விட்டாலும் மற்ற சில அமைப்புகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை.

 

இந்நிலையில் தீர்ப்பை ஏற்பதா? அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்வதா? என்பது குறித்து முடிவு எடுக்க அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மௌலானா தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் லக்னோவில் நடைபெற்றது.

 

இஸ்லாமிய அமைப்பான பாபர் மசூதி நடவடிக்கைக் குழு, சன்னி வக்பு வாரியம், அசாருதீன் கோவை சீன் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ் ஈ இதுகதுல் முஸ்லிமின் உள்ளிட்ட அமைப்புகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் சீராய்வு மனு விரைவில் தயாரிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக முடிவாகி இருக்கிறது.

 

மேலும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்கப்போவதில்லை என்றும், இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செயலாளர் ஜிலானி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon