நாளை இலங்கை அதிபர் தேர்தல்: கண்காணிப்பு பணிகள் தீவிரம்
இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு பதிவுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 35 பேர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சுமார் ஒரு கோடியே 67 லட்சம் பேர் இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று கூறுகிறார்கள். அதிபர் தேர்தலை ஒட்டி இலங்கை முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தேர்தலைக் கண்காணிக்க இந்தியாவிலிருந்து 3 தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட 14 வெளிநாட்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிபர் தேர்தலில் அசம்பாவிதங்களை தவிர்க்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




