குடிமராமத்து திட்டத்தை மக்கள் இயக்கமாக உருவாக்கி நிறைவேற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், தலைமை செயலாளர் சண்முகம், நீர்வளப் பாதுகாப்பு நதிநீர் சீரமைப்பு தலைவர் சத்யகோபால் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர் மேலாண்மை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்வடிவம் பெற்றிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.