--- --:--:-- --

சொகுசு காரில் நூதன முறையில் ஆடுகளை திருடி வந்த 4 பேர் கைது

9

நான் அருகே சொகுசு காரில் நூதன முறையில் ஆடுகளை திருடி வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் நாகூர் பகுதியில் இரவு நேரங்களில் ஆடுகள் திருடு போவதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.

 

இந்நிலையில் நாகூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது திட்டச்சேரியிலிருந்து நாகை நோக்கி வந்த சொகுசு காரில் 3 ஆடுகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் காருக்குள் இருந்த பால்பண்ணை சேரி, வெளிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த தமீம் அன்சாரி, முகமது சையத், தனுஷ், மகேந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆடுகளைத் திருடி வந்தது தெரியவந்தது.

 

இதனையடுத்து மூன்று ஆடுகளை விட்டு நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon