மகாத்மா காந்தி விபத்தில் இறந்தார்? – சர்ச்சையை கிளப்பிய அரசுப்பள்ளி கையேடு

தேசத்தந்தை மகாத்மா காந்தி ஜனவரி மாதம் 30ஆம் தேதி டெல்லி பிர்லா இல்லத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசு பள்ளி கையேட்டில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது போதனைகள் குறித்து தேசப்பிதா என்ற தலைப்பில் இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு கையேட்டை ஒடிசா அரசு வெளியிட்டது.

 

காந்தி பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கையேடு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த கையேட்டில் 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி டெல்லியில் பிர்லா இல்லத்தில் ஏற்பட்ட விபத்தில் காந்தியடிகள் இறந்ததாக அச்சிடப்பட்டுள்ளது.

 

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பல்வேறு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சைக்கு பிறகு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேடுகள் திரும்பப் பெறப்பட்டு வருவதாகவும், இந்த பிழைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒடிசா மாநில கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.


One thought on “மகாத்மா காந்தி விபத்தில் இறந்தார்? – சர்ச்சையை கிளப்பிய அரசுப்பள்ளி கையேடு

Leave a Reply