அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் மாணவர்கள் தண்ணீர் பருக 10 நிமிட இடைவேளை

மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி இனி ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் தண்ணீர் அருந்த 10 நிமிடம் இடைவேளை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், போதிய அளவுக்கு தண்ணீர் பருகாததால், குழந்தைகளுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

 

எனவே, அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி இனி ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் தண்ணீர் அருந்த 10 நிமிடம் இடைவேளை வழங்கப்படும் என்றார்.

 

மேலும், 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 3 ஆண்டு விலக்கை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply