5 வீரர்களின் ஒப்பந்தத்தை முறித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 5 பேரின் ஒப்பந்தம் முறித்து கொள்ளப்பட உள்ளது.

 

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய வீரர் சைதன்யா, இங்கிலாந்து இளம் வீரர் சேம் பில்லிங், இந்திய வீரர் துருவ் சோரோ ஆகியோர் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

மேலும் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி, இந்திய பந்துவீச்சாளர் மோஹித் சர்மா ஆகியோரும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டுக்கான அணியை வலுப்படுத்தவே 5 வீரர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 வீரர்களை விடுவிப்பதன் மூலம் சென்னை அணியின் கையிருப்புத் தொகை 14.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


Leave a Reply