நிர்மலா சீதாராமனிடம், தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி குறைக்க அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் கோரிக்கை

கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி பகுதிகளில் லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள் செய்துவரும் தீப்பற்றி தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டுமென தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

 

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் பன்னாட்டு வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தீப்பெட்டி தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.


Leave a Reply