--- --:--:-- --

ஐயப்பனை தரிசிக்க 36 பெண்கள் ஆன்லைனில் பதிவு

6-25-300x300

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல ஆன்லைனில் 36 பெண்கள் பதிவு செய்துள்ள நிலையில் அவர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள அரசும், தேவசம் போர்டும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

 

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனத்தில் பங்கேற்க 36 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதனால் பெண்கள் செல்ல அனுமதி அளித்திருந்த தீர்ப்பே அமலில் இருப்பதால் முன்பதிவு செய்துள்ள பெண்களை அனுமதிப்பது குறித்து கேரள அரசும் தேவசம் போர்டும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் அனுமதிக்கப்பட்டால் கடந்த ஆண்டை போலவே பிரச்சினை ஏற்படுமோ எனவும் தேவசம் போர்டு அமைப்பினர் அச்சத்தில் இருக்கிறார்கள்.

 

அமைச்சர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைகள் சபரிமலைக்கு வரும் பெண்களிடம் பிரச்சினைகளை எடுத்துக் கூறி சமாதானப்படுத்தி திருப்பி அனுப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு முழுமையான தகவல்கள் தெரியவரும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon