தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டலாம் – கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கர்நாடகா அரசு அணை கட்ட எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

 

தென்பெண்ணை ஆறு, கர்நாடக மாநிலம் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகி, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக, கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் முக்கிய நீராதாரமாகவும், கிளை ஆறாகவும் விளங்கும் மார்கண்டேய நதியின் குறுக்கே, கர்நாடகம் அணை கட்டுகிறது.

 

இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி, எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என தமிழ்நாடு அரசு முறையிட்டிருந்தது.

 

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா, அணை கட்டத் தடையில்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Leave a Reply