பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும் என்று, பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
பிரேசில் நாட்டில் 11-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே, புதன்கிழமை பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். அதேபோல், ரஷ்ய அதிபர் புதினையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
அதை தொடர்ந்து பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது:உடற்பயிற்சி, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பிரிக்ஸ் நாடுகள் தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், அண்மையில் ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தை இந்தியா தொடங்கி இருக்கிறது.
உலகளவிலான வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகம் வெறும் 15% மட்டுமே உள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும் என்று மோடி பேசினார்.