காணாமல் போன பாடகி சுசித்ராவின் தற்போதைய நிலை என்ன?

காணாமல் போனதாக கூறப்பட்ட திரைப்படப் பின்னணி பாடகி சுசித்ரா சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுசி லீக்ஸ் இந்தப் பெயரை தமிழ் திரையுலகமும், இணைய ரசிகர் உலகம் மறந்திருக்காது.

 

திரைப்பட பின்னணிப் பாடகி சுசித்ரா பெயரின் சுருக்கமே சுச்சி. அதோடு அவர் வெளியிட்ட லீக்ஸ் சேர்த்து சுசிலீக்ஸ் என்ற பெயரில் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் திரையுலகை சேர்ந்தவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 2017 ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

 

அதன்பிறகு தன்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கணவர் கார்த்திக் குமார் மூலமாக விளக்கமளித்தார் சுசித்ரா. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த சுசித்ரா அடையாறில் உள்ள சகோதரி சுஜிதா வீட்டில் வசித்து வந்தார்.

 

இந்நிலையில் சுசித்ரா காணாமல் போய்விட்டதாக கடந்த 11ஆம் தேதி அடையாறு காவல் நிலையத்தில் புகார் தந்தார் சுஜிதா. இதனையடுத்து சுசித்ராவின் செல்போன் மற்றும் கார் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சுசித்ரா தங்கி இருந்ததை கண்டறிந்தார்கள்.

 

தான் காணாமல் போகவில்லை என்றும் சுஜிதா உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருடைய வீட்டிலிருந்து தான் வெளியேறி விட்டதாகவும் காவல்துறையிடம் சுசித்ரா தெரிவித்துள்ளார். வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கவே தமிழ் சுஜிதா தேடுவதாகவும் காவல்துறையிடம் சுஜித்ரா கூறியுள்ளார்.

 

தம்மை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடத்துவதால் குடும்பத்தினரை விட்டு விலகி விட்டதாக சுசித்ரா தெரிவித்துள்ளார். தமக்கு மனநல பாதிப்பு ஏதுமில்லை என கூறியுள்ள அவர் ஆனாலும் காவல்துறையின் அறிவுறுத்தல் படி அண்ணாநகரில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply