பெரும்பான்மை பலம் இருந்தால் சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் ஆளுநரை அணுகலாம் என்று பாஜக தலைவர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் வேட்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் தான் என்பதும் சிவசேனாவிற்கு தெரியும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியும், தேவேந்திர பட்னாவிஸ் பெயரை முன்மொழிந்து முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க வாக்குகள் சேகரித்ததையும் அமித்ஷா நினைவுகூர்ந்தார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சித்தார்.
சிவசேனா உடன் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக தயாராக இருந்தபோதும் சிவசேனா திடீரென கோரிய சில நிபந்தனைகளை ஏற்க முடியவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.