சென்னையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை டோர் டெலிவெரி செய்து வந்த மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா டெலிவரி நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க இணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிப்பதற்காக போலீசார் மாறுவேடத்தில் கஞ்சா கேட்டுள்ளனர். அப்போது கோடம்பாக்கத்திற்கு கஞ்சா எடுத்துவந்த லிண்டன் டோனி என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கமலக்கண்ணன் மற்றும்ஐஐடி பணி புரியும் அரவிந்த் ஆகியோர் தான் கஞ்சா விற்பனை செய்யச் சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
பில்ட் இன்டெக் கண்காட்சி கோவை கொடிசியாவில் ஏப்ரல் 20-ல் தொடக்கம்!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்