சென்னை புது வண்ணாரப்பேட்டையில் இரு சக்கர வாகனங்களை திருடி நம்பர் பிளேட்டை மாற்றிப் பயன்படுத்திவந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கௌதமன் என்பவரது இருசக்கர வாகனம் திருடு போனதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் காவலர்களைப் பார்த்து நிற்காமல் சென்றார்.
காவல்துறையினர் விரட்டி பிடித்து விசாரித்ததில் இருசக்கர வாகனங்களை திருடி நம்பர் பிளேட்டை மாற்றிப் பயன்படுத்துவது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.