செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்கணும் போல இருக்கு : பாஸ்கரன் ஆவேசம்

செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்கவேண்டும் போன்று உள்ளதாக அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியிருக்கிறார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் செல்போன் நல்ல நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றைப் பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக கூறினார்.

 

இதனால் மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் குறைந்து வருவதாகவும் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.


Leave a Reply