--- --:--:-- --

பெங்களூரு – கரைக்கால் விரைவு ரயில் தடம் புரண்டது

4

பெங்களூரு – காரைக்கால் விரைவு ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் காடுபட்டி என்னும் இடத்தில் தடம் புரண்டது. பெங்களூருவில் இருந்து காரைக்கால் நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த காடு பட்டியில் எதிர்பாராதவிதமாக தடம்புரண்டது.

 

ரயிலின் பிரதான சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதால் தடம்புரண்டதாக தெரிகிறது. இதனையடுத்து ரயிலின் ஓட்டுனர் சாமார்த்தியமாக ரயிலை நிறுத்தினார். இதனால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே மீட்புக்குழுவினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர். தடம்புரண்ட சக்கரங்களை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon