ஆரணி அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இடுகாட்டுக்கு செல்லக்கூடிய பாதை இல்லாததால் ஆற்றில் இறங்கி சடலத்தை எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆரணி அடுத்த மல்லிகாபுரம் கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

 

இந்த கிராமத்தை சேர்ந்த சின்னக்குழந்தை என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல உரிய பாதை இல்லாததால் ஆற்றில் இறங்கி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சடலத்தை தூக்கி சென்றனர்.

 

கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியதால் இடுகாட்டு பாதையை சரி செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இருப்பினும் ஓராண்டுக்கு மேலாகியும் இடுகாட்டுக்கு பாதை அமைக்கப்படாமல் உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.


Leave a Reply