அதிபர் டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் – அப்படி என்ன செய்தார் தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு, அறக்கட்டளை நிதியை தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்திய குற்றாச்சாட்டில், ரூ.14 கோடி அபராதாம் விதிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தார். கடந்த 2016இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, இந்த அறக்கட்டளையின் நிதியை, தனது தேர்தல் செலவுகளுக்கு டிரம்ப் முறைகேடா பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

 

இது தொடர்பாக, நியூயார்க் நகர நீதிமன்றத்தில் டிரம்ப்பிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த அறக்கட்டளை மூடப்பட்ட நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

 

இவ்வழக்கில், டிரம்புக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.14 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ) அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது, அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Leave a Reply