தாய் மகனோடு சேர்ந்து கணவரை காருடன் எரித்துக் கொலை!
கரூர் மாவட்டத்தில் தொழிலதிபரை காருடன் தீ வைத்து எரித்துக்கொன்றதாக அவருடைய மனைவியும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். க.பரமத்தி அருகே சாலையோரத்தில் எரிந்த நிலையில் கிடந்த காரில் முற்றிலும் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.
இதில் காருடன் எரித்துக் கொல்லப்பட்டது நொய்யலை சேர்ந்த பேருந்து பாடி கட்டும் நிறுவன உரிமையாளர் ரங்கசாமி என்பது தெரிய வந்தது. அவருடைய மனைவி கவிதாவும், மகன் அஸ்வின் குமாரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு காரை பரமத்தி அருகேயே நிறுத்திவிட்டு தீ வைத்தது எரித்தது தெரியவந்தது.

தாயையும் மகனையும் போலீசார் கைது செய்தார்கள். வேறு ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த ரங்கசாமி தன்னை துன்புறுத்தி வந்ததால் மகனுடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீசாரிடம் கவிதா கூறியிருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




