ஆவடி அருகே காய்ச்சலுக்கு பத்தாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் அபிராமி. அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இவருக்கு கடந்த 6 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவியின் உயிரிழப்பு அந்த பகுதியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காய்ச்சல் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்