தொண்டியில் தொடரும் திருட்டு… தூக்கத்தை தொலைத்து நிற்கும் பொதுமக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தொண்டி அருகே பெருமானேந்தல் என்னும் கிராமத்தில் விவசாயி பாலசுப்பிரமணியன் (61) என்பவர் வசித்து வந்தார். இவர் வழக்கம்போல் தனது வயலுக்கு விவசாய பணிக்காக சென்றுள்ளார்.

 

இந்நிலையில் மதியம் 1.30 மணியளவில் வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அந்த மர்மநபர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயையும், 15 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

 

வயலில் விவசாய பணிகள் முடித்துவிட்டு மாலை வீடு திரும்பிய பாலசுப்பிரமணியன் வீட்டை திறந்து பார்த்தபோது திருடுபோன விஷயத்தைக் கண்டு அதிர்ச்சியுற்று, தொண்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராமநாதபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர் மற்றும் துணை கண்காணிப்பாளர் யூசுப் தலைமையில் வந்து தடயங்களை சேகரித்தார்கள்.மேலும் அங்கு மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது.

 

அந்த மோப்பநாய் வீட்டில் இருந்து சற்று தூரம் பெருமானேந்தல் சுடுகாடு அருகே கண்மாய் வரை சென்று திரும்பியது. இதுகுறித்து மேலும் தொண்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply