பசு மாட்டின் பாலில் தங்கம் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறிய நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பசு மாடுகளை வைத்துக்கொண்டு தங்க கடன் வழங்க கோரி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்திய பசுக்களின் பாலில் தங்கம் இருப்பதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்திய பசுக்களின் ரத்த நாளமானது சூரிய ஒளியின் உதவியுடன் தங்கத்தை உற்பத்தி செய்வதாக கூறிய அவர் அதன் காரணமாகவே இந்திய பசுக்களின் பாலில் சிறிது மஞ்சள் நிறத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

திலிப் கோஷின் இந்த பேச்சு பரவலாக கேலி கிண்டலுக்கு உள்ளாகின. இந்த நிலையில் தனது மாட்டின் பாலில் தங்கம் இருப்பதாக கூறி அதற்கு தங்க கடன் வழங்க வேண்டும் என மேற்கு வங்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்மாநிலத்தில் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்ற அவர் தம்மிடம் 20 பசுமாடுகள் இருப்பதாகவும் அவற்றை கொண்டு தங்கக் கடன் வழங்கினால் தனது தொழிலை விரிவுபடுத்த உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.