எருது 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை!

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் விலங்குகள் விற்பனை கண்காட்சியில் எருது ஒன்று சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. புஷ்கரில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சுமார் ஐந்தாயிரம் எருதுகளில் பீம் என பெயரிடப்பட்டுள்ள இந்த எருதும் இடம்பெற்றுள்ளது.

 

சுமார் 1000 கிலோ எடை மற்றும் ஆறடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் எருது, கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுருளாக வளைந்த கொம்புடன் காட்சியளிக்கும் எருதுவை 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று விற்பனையாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Leave a Reply