திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆதரவின்றி இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு சிகிச்சை அளித்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்த மன்னார்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகே பல நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் காலில் காயங்களுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த மாதம் 21ஆம் தேதி மன்னார்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு தகவல் தரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த மருத்துவர்கள் எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த அந்த நபரை மீட்டு சிகிச்சை தந்தார்கள். இதனையடுத்து அவருக்கு தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருத்துறைப்பூண்டியில் உள்ள நம்பிக்கை காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.