அதிமுக செயற்குழு, பொதுக்குழு நவ. 24ல் சென்னையில் கூடுகிறது

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என ஓ. பன்னீசெல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிவித்து உள்ளனர்.

 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், வரும் 24 ஆம் தேதி சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், அதிமுக அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

 

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழ் வைக்கப்படும், அவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


Leave a Reply