கமல்ஹாசன் பிறந்தநாள் – ரஜினிகாந்த், திரைப்பிரபலங்கள் வாழ்த்து

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று, 65வது பிறந்தநாள் என்பதால், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பிரபலங்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினரும், கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி உள்ளிட்டோர், தங்களது டுவிட்டர் பக்கம் வாயிலாக, கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நடிகர் கமல், தனது பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்தினரை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

 

இதற்கிடையே, தற்போது நாட்டிற்கு இன்னொரு சுதந்திரப் போர் தேவை; போக்கிடம் இல்லாமல் தாம் அரசியலுக்கு வரவில்லை என்று, கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


Leave a Reply