நடிகர் சங்க விவகாரம் – தமிழக அரசு தலையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

நடிகர் சங்க விவகாரத்தில் தமிழக அரசு தலையிடக்கூடாது என வலியுறுத்தி துணை நடிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான துணை நடிகர்கள் பங்கேற்றனர்.

 

நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் சங்கத்தை மேற்பார்வை செய்ய சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் சங்கத் தேர்தல் தலைவராக இருக்கும் நடிகர் விஷால் மற்றும் அவரது அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தவே சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

 

இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் உட்பட அனைவரும் ஆதரவளிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.


Leave a Reply