நகை வாங்குவது போல் ஏமாற்றி நகைகளை இருவர் திருடும் சிசிடிவி காட்சிகள்

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் ஏமாற்றி நகைகளை இருவர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனிஷ்க் என்ற நகைகடையில் கணேஷ், சோனம் ஆகிய 2 பேர் நகை வாங்குவதற்காக வந்துள்ளனர்.

 

அப்போது நகை கடையில் இருந்த பெண் ஊழியர்களிடம் நகை மாடல்களை காட்டச் சொல்லி நகை வாங்குவது போல் நாடகம் ஆடுகின்றனர். அந்தப் பெண்கள் நகையை எடுத்து திரும்பிய போது அதில் ஒருவர் நகையை மறைத்து அருகில் இருந்த நண்பரிடம் கொடுக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

இதுகுறித்த புகாரின் பேரில் கணேஷ், சோனம் ஆகிய இருவரை அண்ணாநகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply