மீண்டும் இந்தியை திணிக்க பார்க்கிறது அரசு- கண்டனம் தெரிவித்து டி.ஆர். பாலு கடிதம்

இந்தி திணிப்பு முயற்சியில் பாரதிய ஜனதா அரசு ஈடுபடுவதாகவும், இது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்றும் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

இது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருக்கு டி.ஆர் பாலு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:

 

தேசிய தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு, திறன் மேம்பாட்டு மாநாடு, வரும் ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. ஆங்கிலம், இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

 

இந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபடும் பாஜக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. இந்தி ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

தேசிய தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு, திறன் மேம்பாட்டுக்கான மாநாட்டில் மாநில மொழிகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply