திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில், திருவள்ளுவரின் சிலைக்கு காவி துண்டு அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

 

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை, சில தினங்களுக்கு முன் அவமதிக்கப்பட்டது. இதற்கு பலதரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

 

இதற்கிடையே, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இன்று பிள்ளையார்பட்டிக்கு வந்திருந்தார். அவர், திருவள்ளுவர் சிலைக்கு ருத்திராட்ச மாலை அணிவித்து, காவி துண்டு போர்த்தி, வணங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூரில் அர்ஜுன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர். அவருடன் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.


Leave a Reply