பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? த.மா.கா. தலைவர் வாசன் பேட்டி

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் விவாதித்ததாக, அவரை சந்தித்த பிறகு, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

 

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்திருந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் ஜி.கே.வாசன் வரவேற்றார். அப்போது, தம்மை டெல்லியில் வந்து சந்திக்கும்படி வாசனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

 

இதையேற்று, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, வாசன் சந்தித்து பேசினார். பாஜகவில் வாசன் இணையப் போவதாக, அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு நிலவிய சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

 

இந்த சந்திப்புக்கு பிறகு, ஜி.கே.வாசன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக விளக்கம் அளித்தார்.

 

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தாகவும், தமாகா தனித்தன்மையோடு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மகாராஷ்டிரா விவகாரத்தில் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜி.கே. வாசன், இதில் அமித் ஷாவின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அமித்ஷாவை இம்முறை சந்திக்கவில்லை என்றார் வாசன்.


Leave a Reply