“இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு” – துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு

இன்னும் பதினைந்து தினங்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்றது.

 

இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாராயணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அரசியலில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.

 

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் பெற்ற வெற்றியை உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக ஈட்டும் என்று துணை முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.


Leave a Reply