அடுத்தாண்டு முதல் 8ஆம் வகுப்பு முப்பருவ பாடத்திட்டம் ரத்து

தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டு முதல், 8ஆம் வகுப்பு முப்பருவப் பாடத்திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில், 2012ம் ஆண்டு முதல், ஒன்றாம் வகுப்பு முதல், 8ஆம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்புக் கல்வியாண்டில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

எனவே, முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

 

அதன்படி, முதற்கட்டமாக 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல், முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டு ஒரே பாடத்திட்டமாக செயல்படுத்தப்படும். இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


Leave a Reply