திருவள்ளுவர் சிலையை அவமதித்தது யார்?

தஞ்சையில் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டலத்தின் ஐ‌ஜி வரதராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் நடுத்தர வயதுடைய ஒருவர் ஈடுபட்டிருப்பது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.


Leave a Reply