திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் காரை வழிமறித்து ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எரவாஞ்சேரி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் ஆசீர்வாதம் என்பவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த வருடம் விடுதலையானார்.
அதிகாலை எரவாஞ்சேரியில் இருந்து தன்னுடைய இல்லத்திற்கு மோகன் காரில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே மோகன் உயிரிழந்தார்.
இந்நிலையில் தன்னுடைய தந்தையை கொலை செய்வதற்கு பழிவாங்கவே மோகனை கொலை செய்ததாக கூறி அந்தோணிசாமி உட்பட 5 பேர் திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மேலும் செய்திகள் :
1,170 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!