காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கட மங்கலத்தில் பாலிடெக்னிக் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய நண்பர் விஜய் வீட்டிற்கு சென்று முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார். முகேஷ் நெற்றியில் குண்டு துளைத்ததாக தெரிகிறது. உயிருக்கு ஆபத்தான நிலைமையில் முகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வீட்டில் இருந்த விஜய் தப்பியோடி விட்டதாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.