திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததற்கு ப.சிதம்பரம் கண்டனம்

திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசப்பட்ட விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். காவி உடை அணிந்திருப்பது போலான திருவள்ளுவரின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுள்ளது.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம் தனக்கு காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் 833 ஆவது குறளை ஏற்றி இருக்கலாம் என தனக்கு தோன்றுவதாக விமர்சித்துள்ளார்.

 

‘நாணாமை நாடாமை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்’ என்ற குறளை பதிவு செய்துள்ள ப.சிதம்பரம் பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின் தொழில்கள் என குறள் விளக்கத்தையும் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply