நீதிமன்ற பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நீதிபதியை கண்டித்து கோவையில் நீதிமன்ற ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் !!!
நீதிமன்ற பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நீதிபதியை கண்டித்து நீதிமன்ற ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜே. எம் 1 ல் நீதிபதியாக இருப்பவர் நிலவேஸ்வரன்.இவர் நேற்று மாலை தனது சேம்பரில் அமர்ந்திருந்தார். அப்போது, நீதிமன்றத்தில் டைப்பிஸ்டாக பணிபுரியும் நாகர்கோவிலை சேர்ந்த சாரதி (38) என்ற பெண் தான் டைப் செய்த காகிதத்தை நீதிபதியிடம் கொண்டு வந்தாராம்.அதில் பிழைகள் இருந்ததாகவும்,இது தொடர்பாக ஊழியர் சாரதிக்கும், நீதிபதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றவே நீதிபதி டைப் செய்த பேப்பர் பேடை தூக்கி எறிய அது சாரதியின் இடது பின்புற தலை அருகே பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் மருத்துவமனைக்கு சென்று பெண் ஊழியரிடம் விசாரணை நடத்தியதில் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு நீதிமன்ற ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு பெண் ஊழியரை தாக்கிய நீதிபதியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நீதிபதி மீது காவல் துறையினர் விசாரணை நடத்த தயங்குவதும், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யாமல் இருப்பதும் நீதித்துறையின் மீதே பொது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும்,இதை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்ற ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




