ஸ்ரீநகரில் கையெறி குண்டு வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். ஸ்ரீநகரில் மௌலானா ஆசாத் சாலை சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 13 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

படுகாயம் அடைந்த இருவரின் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக செயல்படத் தொடங்கியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply