இலங்கை அதிபர் தேர்தல்: இன்றும், நாளையும் 2ஆம் கட்ட தபால் வாக்குப்பதிவு

இலங்கை அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காவல்துறை தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட தலைமை யகங்களில் பணியாற்றுபவர்கள் இரண்டாம் கட்ட தபால் வாக்குப்பதிவில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தபால் வாக்குப்பதிவு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. சுமார் 6 லட்சத்து 59 ஆயிரம் வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் மாதம் 16ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.


Leave a Reply