தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதிலேயே பிரதமர் கவனம் -சோனியா காந்தி குற்றச்சாட்டு

பொருளாதார வீழ்ச்சி குறித்து கவலைப்படாமல் தலைப்பு செய்திகளில் இடம் பெறுவதிலேயே பிரதமர் நரேந்திர மோடி தீவிரம் காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர் தற்போதைய இந்திய பொருளாதாரத்தை பார்க்கும் போது மிகுந்த வேதனை அடைவதாக தெரிவித்தார்.

 

16 ஆசிய நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளவிருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய பொருளாதாரமே நலிவடைந்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டார். வாட்ஸ்அப் மூலம் இந்திய பத்திரிகையாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் உளவு பார்க்கப்பட்டதை குறிப்பிட்ட சோனியாகாந்,தி மோடி அரசுதான் இஸ்ரேல் நிறுவனம் மூலமாக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டினார். இது சட்ட விரோத மட்டுமல்ல அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Leave a Reply