--- --:--:-- --

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு

13

நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் விக்கிரவாண்டி எம்எல்ஏவாக முதமிழ்ச்செல்வனும், நாங்குநேரி எம்எல்ஏவாக ரெட்டியார்பட்டி நாராயணன் பதவியேற்றனர்.

 

இடைத்தேர்தல் வெற்றி முடிவுகள் 24ஆம் தேதி வெளியான நிலையில் இருவரும் கடந்த 29 ஆம் தேதி பதவி ஏற்பதாக இருந்தது. இந்த நிலையில் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை மீட்பு பணியில் அரசு முழுவீச்சில் ஈடுபட்டு இருந்ததால் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

பதவியேற்புக்கு முன்னதாக முத்தமிழ்ச் செல்வன், ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். எம்எல்ஏக்கள் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon