--- --:--:-- --

இந்தியா – ஜப்பான் நாடுகள் கூட்டு ராணுவப் பயிற்சி…! – வீடியோ வெளியீடு

4

இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவத்தின் கூட்டு பயிற்சி மிசோரம் மாநிலத்தில் நடைபெற்றது. இதுதொடர்பான வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலை எதிர் கொள்வதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

 

மிசோரம் மாநிலத்தில் உள்ள இடத்தில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டுப் பயிற்சி நாளையுடன் நிறைவடைகிறது. தர்மா கார்டியன் 2019 என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டு பயிற்சியில் சிறிய ரக ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இது இரு நாடுகளின் ராணுவத்திற்கும் இடையே உள்ள பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் வலிமை ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது. மேலும் உலகளாவிய பயங்கரவாதத்திற்கு சவால்விடும் வகையில் இந்த பயிற்சி உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டுப் பயிற்சி தொடர்பான வீடியோ ஒன்றினை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon