நெகிழ வைத்த மனிதநேயம்…! கேரள ஓட்டுநர், நடத்துநருக்கு குவியும் பாராட்டு

நள்ளிரவில் ஒரு இளம் பெண் தனியாக பேருந்தில் இருந்து இறங்கினாள் அவருக்கான பாதுகாப்பு என்ன என்ற கேள்வி இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது. இதனால்தான் பேருந்திலிருந்து இறங்கிய இளம் பெண்ணுக்காக கேரள அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் செய்த உதவி பாராட்டுகளை பெற்று வருகிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மதுரைக்கு கிளம்பியது அந்த கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்து.

 

பெங்களூருவில் எம்ஃபில் படிக்கும் எல்சீனா மறுநாள் காலை 9 மணிக்கு வேலைக்கான நேர்காணலுக்கு செல்ல அந்த பேருந்தில் பயணம் மேற்கொண்டார். காஞ்சிரப்பள்ளி எந்த இடத்தில் இறங்கி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு காலையில் அங்கிருந்து நேர்காணல் செல்ல திட்டமிட்டிருந்தார் எல் சீனா. ஆனால் எல் சீனா காஞ்சிரப்பள்ளி நெருங்கிய போது இரவு 11 மணி ஆகிவிட்டது.

அங்கு மழையால் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்து காணப்பட்டதால் எல் சீனாவுக்கு பதற்றம் ஏற்பட்டது. அந்த ஊரில் வேறு பயணிகள் யாரும் இறங்கவும் இல்லை. கலக்கத்துடன் இருந்த அந்த பெண்ணின் முகத்தை பார்த்த பேருந்து நடத்துனர் ஷாஜி அவரிடம் விசாரித்தார். பேருந்து நிறுத்தத்தில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிய உறவினர் போனை எடுக்காததே எல்சீனாவின் பதற்றத்திற்கு காரணம் என தெரியவந்தது.

 

யாருமில்லாத அந்த அடர்ந்த இருளில் இளம்பெண்ணை தனியே விட்டுச் செல்ல மனமில்லாத நடத்துனர் சாஜு, ஓட்டுனர் டென்னிஸ் அவரிடம் பேசி பெண்ணை அழைத்து செல்ல ஆள் வரும் வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தார்.இதற்கு சக பயணிகளும் ஒப்புக் கொண்டதையடுத்து பேருந்து இந்தப் பெண்ணை அழைத்து செல்லும் நபருக்காக காத்திருந்தது.

 

மழையால் மண் சரிவு ஏற்பட்டு தான் வருவது தாமதமாக அப்பெண்ணின் உறவினர் தெரிவித்ததையடுத்து பெண்ணுடன் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டுனரும் நடத்துனரும் காத்திருந்தனர். அரை மணி நேர காத்திருப்புக்குப் பின் ஒரு காரில் வந்த உறவினரிடம் பெண்ணை இவர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.

 

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் மனித நேயத்தில் நெகிழ்ந்து கரம் கூப்பி வணங்கிய உறவினர் பேருந்து பயணிகளுக்கும் நன்றி தெரிவித்தார். யாரோ ஒரு பெண் தானே எப்படி போனால் என்ன என்று எண்ணமின்றி அவர் மீது அக்கறை காட்டிய அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு கேரளாவிலிருந்து பாராட்டுகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன.


Leave a Reply