தமது விடுதலையை கெடுப்பதற்காக சிறை அதிகாரிகள் சதி : முருகன்
தமது விடுதலையை கெடுப்பதற்காக சிறை அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்வதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகன் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் மற்றும் அவரது மனைவி நளினி உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் அறையில் இருந்து செல்போன், சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முருகன் தனது விடுதலை மற்றும் பரோலை தடுப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்கிறார்கள் எனவும் சிறையில் தனக்கு சரிவர உணவு தருவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




